Tamil Nadu Rural Transformation Project (TNRTP)
Rural Development & Panchayat Raj
Government Of Tamil Nadu

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (முன்னர் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் - TNRTP) தமிழக கிராம சூழலை மறுசீரமைக்க வெவ்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. வறுமை ஒழிப்பைத் தாண்டி நிலையான வாழ்வாதாரத்தை அமைத்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஊரக நிறுவனங்களை ஊக்குவிப்பது, நிதியுதவிக்கான வழிவகை செய்வது மற்றும் வேலைவாய்ப்புகளை பெருக்குவது போன்ற திட்டங்களை தமிழ்நாடு முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் செயல்படுத்த உள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ( TNSRLM) , தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் ( NRLP) மற்றும் தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தின் ( TNPVP) நிறுவனமயமாக்கப்பட்ட நிதி முதலீடுகளை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டதே வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
31 மாவட்டங்களில், 120 வட்டாரங்களில் உள்ள 3994 ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தபடும்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கோவிட் -19 சிறப்பு நிதியுதவித் தொகுப்பை (சிஏபி) அறிமுகப்படுத்தியுள்ளார். இது கொரோனா காலத்தில் நலிவடைந்திருக்கும் கிராமப்புற பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்காக மே 28, 2020 அன்று தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விரைவான முயற்சியாகும்.
கோவிட் -19 சிறப்பு நிதியுதவித் தொகுப்பை (சிஏபி) அறிமுகப்படுத்தியுள்ளார். இது கொரோனா காலத்தில் நலிவடைந்திருக்கும் கிராமப்புற பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்காக மே 28, 2020 அன்று தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விரைவான முயற்சியாகும்.
தனிநபர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் துவங்கப்பட்ட குறு மற்றும் நுண் தொழில்கள்
வேளாண், வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் அல்லாத துறைகளில் உற்பத்தி செய்யும் தனிநபர்கள் உற்பத்தியை பெருக்கவும், வணிகரீதியாக மேம்படுத்திக்கொள்ளவும் இணைந்து இயங்கும் குழுக்கள்
தனிநபர்கள் குழுவாக இணைந்து, தொழில் நிர்வாகம் செய்து, அதன் லாப-நஷ்டங்களை பகிர்வதற்காக உருவாக்கப்பட்ட குழுக்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள்
வேளாண், வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் அல்லாத துறை உற்பத்தியாளர்கள் பொருட்களை திரட்டவும், உற்பத்தி மதிப்புக் கூட்டல், சந்தைப்படுத்துதல் போன்ற வணிக நடவடிக்கைகளில் ஈடுபடவும் கூட்டமைப்பாக செயல்படுவர்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையர், கணவனை இழந்தவர்கள், ஆதரவற்றப் பெண்கள், பெண் குடும்பத்தலைவராக இருக்கும் குடும்பங்கள், பழங்குடியினர், நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொழில் நிதியுதவி
RUDSETI இன் தேசிய அகாடமி, துறைசார் திறன் பயிற்சியாளர்களுக்கான (‘Domain Skill Trainers) இரு நாள் பயிற்சி (ம) சான்றிதழ் நிகழ்ச்சியை, தர்மபுரி மாவட்டத்தில், இந்தியன் வங்கி RSETI இல் நடத்தியது
PGP மூலம் அடையாளம் காணப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அலைபேசி செப்பனிடும் பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் RSETI சந்தைக்கு வருகைபுரிந்து TNRTP & RSETI பயிற்சி பெற்ற இளைஞர்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களின் விற்பனையைத் தொடங்கி வைத்தார்
உலக இளைஞர் திறன் தினத்தை (ஜூலை 15) முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில், 30 பெண் தொழில்முனைவோருக்கு வண்ண மீன் வளர்ப்புக்கான ஒருநாள் பயிற்சி நடைபெற்றது
ஜூலை – 15 அன்று, மாண்புமிகு சபாநாயகர் திரு. எம். அப்பாவு; RD & PR துறைகளின் மாண்புமிகு அமைச்சர் திரு. கேஆர் பெரியகருப்பன் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகைபுரிந்து, RD துறை திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். மேலும் மாண்புமிகு அமைச்சர் 132 திட்டத் தொழில் முனைவோருக்கு 46.95 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
உலக இளைஞர் திறன் தினத்தை (ஜூலை 15) முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில், 30 பெண் தொழில்முனைவோருக்கு வண்ண மீன் வளர்ப்புக்கான ஒருநாள் பயிற்சி நடைபெற்றது
உலக இளைஞர் தினத்தை (ஜூலை 15) முன்னிட்டு, TNRTP – சிவகங்கை, 20 பெண்களுக்கு, ஊரகப் பயிற்சி மையத்தில், ஒரு மாத திறன் வளர்ப்புப் பயிற்சியை தொடங்கியுள்ளது.மகளிர் நல முயற்சி, திறன் வளர்ப்புப் பயிற்சி.
ஊரக வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புத் துறையின் மாண்புமிகு அமைச்சர் கேஆர் பெரியகருப்பன், 94 திட்ட தொழில்முனைவோருக்கு ரூ. 22.35 லட்சம் நிதியுதவி வழங்கி, துறைசார் ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தினார்.
தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் – ஈரோடு, தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி (ம) மேம்பாட்டுக் கழகத்தில் (TAHDCO) கிடைக்கும் திட்டங்கள் பற்றியும் அவற்றைத் திட்டத் தொழில்முனைவோர் எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றியும் ஒரு மின்னரங்கை (வெபினார்) நடத்தியது.
TNRTP – கிருஷ்ணகிரி, எந்த அளவிலும் வடிவத்திலும் வளர்க்கப்படக் கூடிய, தேனடைத் தேன் (Comb Honey) வழியாக, உற்பத்தியாளர் உற்பத்தித் திறனை மேம்படுத்தும், ஒரு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அண்மையில் நடத்தியது.
தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் (TNRTP) மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) இணைந்து, மாநிலம் முழுவதும் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை சிறப்பாக நடத்தின.
இராமநாதபுரம் மாவட்டத்தில், பெண்கள் நடுவில் கடல்பாசி வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான ஓர் ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.