Tamil Nadu Rural Transformation Project (TNRTP)
Rural Development & Panchayat Raj
Government Of Tamil Nadu

  • (044) 434 43200
  • tnrtpstate@gmail.com

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

சமீபத்திய தகவல்கள்
  • (044) 434 43200
  • tnrtpstate@gmail.com

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

Latest Updates

தனிச்சிறப்புகள்

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் (TNRTP) பெண்கள் தலைமையிலான குடும்பங்களை மையப்படுத்தி செயல்படுகிறது. அடிப்படையான சொத்திருப்புகளும், வாழ்வாதாரத்தை தொழில் நடவடிக்கைகள் மூலம் மேம்படுத்துவதற்கு தேவையான ஆதாரங்களும், திறனும் இருக்கும் குடும்பங்களையே இந்த திட்டம் கணக்கில் கொள்கிறது. திட்ட பயனாளிகள் அனைவரும் சுய உதவிக்குழு உறுப்பினராகவோ அல்லது சுயஉதவிக்குழு உறுப்பினரின் குடும்பத்தில் உள்ளவராகவோ இருக்க வேண்டும். தகுதியுள்ள, விருப்பமுள்ள சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், தனி நபர் தொழில் முனைவோர், உற்பத்தியாளர் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் சுய தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்காக இந்த திட்டத்தால் உருவாக்கப்படும் தொழில் கட்டமைப்பு மற்றும் நிதியுதவியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் முதலீடுகள்

இந்த திட்டம் சமூக ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் பின்தங்கிய குழுக்களில் இருக்கும் தகுதியான குடும்பங்களுக்கு சிறப்பு கவனம் அளித்து அவர்களிடம் உள்ள சொத்திருப்புகளையும், திறன்களையும் மேம்படுத்தி, வருவாயை பெருக்க உதவுகிறது

பொருளாதார நடவடிக்கைகள்

சுய தொழில் துவங்குவதில் இருக்கும் தடைகளை நீக்குதல்

பொருளாதார செயல்முறை

பொருளாதாரம் சார்ந்த முடிவுகளில் மக்களின் முழு ஈடுபாட்டை உறுதிபடுத்துவது

சேவைகள்

பயனாளிகளுக்கு நிதி, தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் மற்றும் தொழில் சார்ந்த உதவிகள் சுலபமாக கிடைப்பதற்கான வழிவகை செய்வது

வருமானம்

தற்சமயம் உள்ள தொழில்களை மேம்படுத்தி அதிக வருவாய் ஈட்டும் தொழிலாக முன்னேற்றுவது

இடர் மேலாண்மை

தொழில் சார்ந்த தடைகள் / இன்னலகளை களைவது

தொடர்பு கொள்ள

  • தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்,
    5-ஆம் தளம், தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டுக் கழகம்,
    திரு.வி.க. தொழிற்பேட்டை, சென்னை - 600 032
  • (044) 434 43200
  • tnrtpstate@gmail.com